மகா வேசி THE GREAT HARLOT நாம் பெற்றிருந்த மிகவும் பழமையான முதலாம் ஸ்தாபன சபை கத்தோலிக்க சபையே. கடைசி அப்போஸ்தலன் மரித்து 300 ஆண்டுகள் கழித்து அது ஸ்தாபிக்கப்பட்டது. அது உண்மை . அதை “ஆதி நிசாயா பிதாக்கள்'' “ஜோசிபசின் (Josepheous) புத்தகங்கள்'' போன்ற வரலாற்று புத்தகங்களில் நீங்கள் காணலாம். அதுவரை இருந்த சபை காலங்களிலும், கடைசி அப்போஸ்தலன் மரிக்கும் வரைக்கும், அதன் பின்னர் 300 ஆண்டுகள் வரைக்கும் ஸ்தாபன சபைகள் எதுவுமே இருந்த தில்லை... கத்தோலிக்க சபை தான் முதலாம் ஸ்தாபன சபை. பிராடெஸ்டெண்டு சபைகள் என்பவை, ஒரு ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்த ஸ்தாபன சபைகளாம். முதலாம் சீர்திருத்தம் மார்டின் லூத்தர் மூலம் தோன்றினது, லூத்தருக்குப்பின் ஸ்விங்லி எழும்பினார். ஸ்விங்கிலிக்குப்பின் கால்வின்; இவ்வாறு தொடர்ச்சியாக வந்து வெஸ்லியன் சீர் திருத்தத்தை நாம் அடைகிறோம். அதன்பின்பு அலெக்ஸாண்டர் காம்ப்பெல், ஜான் ஸ்மித் போன்றவர் தோன்றினர். இப்பொழுது நாம் பெற்றுள்ள கடைசி இயக்கம் பெந்தெகொஸ்தே காலத்தின் வெவ்வேறு கட்டங்களாம். தேவன் ஒவ்வொரு காலத்திலும் ஈடுபட்டிருந்தார் என்று நம்புகிறேன். ஆனால் இதை கவனித்தீர் களா? ஒவ்வொரு முறையும் சபையானது தவறிப்போய், தனக்கென ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அதன் விளைவாக விழத் தொடங்கி தேவனுக்கு தவறிழைத்தபோது, தேவன் மறுபடியும் அந்தச் சபையை உயிர்ப்பிக்கவில்லை. அது சரியாக நேரடியாய் வித்திற்கு சென்றுவிடுகிறது. அதற்கான சரித்திர ஆதாரங்கள் உங்களுக்குத் தேவையானால், அதை எங்களால் நேரடியாக காண்பிக்க முடியும். அதாவது, சபையின் சரித்திரத்தில், எந்த ஒரு சபையும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு விழுந்து போன பின்பு, அது மறுபடியும் எழும்பவில்லை. அது பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் யாராயிருந்தாலும் சரி, அவர்கள் விழுந்த பின்பு அவ்வளவுதான். அது முற்றிலும் உண்மை. ஒரு தனிப்பட்ட மனிதன் வெளியே வந்து ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்ட காலம் எதுவுமில்லை. தேவன் எப்பொழு துமே தனிப்பட்ட நபருடன் தொடர்புகொள்ளுகிறாரேயன்றி, ஒரு ஸ்தாபனத்துடன் அவர் தொடர்பு கொள்வதில்லை. எந்த காலத்திலும் தேவன் ஒரு ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டதில்லை. அவர் எப்பொழுதும் தனிப்பட்ட நபர் ஒருவருடன் மாத்திரம் தொடர்புகொண்டு வந்துள்ளார். பழைய ஏற்பாட்டின் காலத்திலும் அவர் தனிப்பட்ட நபருடன் மாத்திரமே தொடர்புகொண்டார்; புதிய ஏற்பாட்டின் காலத்திலும் அவர் அப்படியே தனிப்பட்ட நபருடன் தொடர்புகொண்டார். எந்த ஒரு காலத்திலும் அவர் தனிப்பட்ட நபருடன் மாத்திரமே தொடர்பு கொண்டார், ஸ்தாபனங்களுடனல்ல. எனவே தேவன் ஒரு ஸ்தாபனத்தில் இல்லையென்றால், நான் ஸ்தாபனத்துடன் தொடர்புகொண்டிருப்ப தனால் என்ன பயன்? நான் ஸ்தாபனத்துக்குள் இருக்கும் ஜனங்களைக் குறித்து கூறவில்லை. நான் ஸ்தாபனங்களைக் குறித்து மாத்திரம் கூறுகிறேன். ஏனெனில் தேவனுடைய பிள்ளைகள் எல்லா ஸ்தாபனங்களிலும் உள்ளனர். தேவன் முன்னெச்சரிக்கை தராமல், எந்த ஒரு காரியமும் நிகழ அனுமதிப்பதில்லை... உதாரணமாக அண்மையில் சபைகளில் சில பிரச்சினைகள் தோன்றின. இரத்தமும் எண்ணெயும் தோன்றினதாக அறிவிக்கப்பட்டன. “சகோ. பிரான்ஹாமே, இது உண்மையா?'' என்று கேட்டு எனக்கு அநேக கடிதங்கள் வந்தன. அதற்கு விரோதமாக நான் இருந்த காரணம் என்னவெனில், அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து தேவனுடைய வார்த்தையில் காணப்படவில்லை. நான் ஸ்தாபனங்களுக்கு எதிராயுள்ள காரணமும் அதுவே. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையில் இல்லை. நமது விசுவாசத்தை நாம் ஏதாவது ஒன்றின் பேரில் ஆதாரமாகக் கொண்டிருக்கவேண்டும். அதை நாம் ஏதாவது ஒரு ஸ்தாபனத்தின் பேரில் ஆதாரமாகக் கொள்ளக்கூடாதென்றால், அதை நாம் தேவனுடைய வார்த்தையின் பேரில்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கவேண்டும். ஏனெனில் தேவனுடைய வார்த்தை ஒன்று மாத்திரமே ஆதாரம். அப்படியிருக்க, தேவனுடைய வார்த்தை ஸ்தாபனங்களை ஆதரிக்காமல் அதற்கு விரோதமாக உரைத்தால், நாமும் தேவனுடைய வார்த்தையின் சார்பில் பேசக் கடமைபட்டவர்களாயிருக்கிறோம். பேராயரோ, அல்லது நல்ல மனிதர் யாராகிலும் ஒருவர் என்ன கருதினாலும், என்ன கூறினாலும் அது தேவனுடைய வார்த்தையின்படி அமைந்திராவிடில், அது தவறு. பாருங்கள்? தேவனுடைய வார்த்தை மாத்திரமே முடிவானதாக, 'ஆமென்”னாக இருக்கவேண்டும். கவனியுங்கள்; நான் யாரையும் கிறிஸ்தவர்கள் அல்ல என்று கூறிவிடவில்லை. அதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? ஸ்தாபனங்களில் ஆயிரக் கணக்கான விலைமதிக்க முடியாத ஆத்துமாக்கள் - தேவனுடைய பிள்ளைகள் - உள்ளனர். ஆனால் அவர்களைப் பிரித்து, பாகுபடுத்தி, தனித்தனி ஸ்தாபனங்களில் வைத்திருக்கும் செயலுக்கு நான் விரோதமாயிருக்கிறேன். தேவனுடைய வார்த்தையும் அதற்கு விரோதமாயுள்ளது. இன்று நாட்டில் காணப்படும் “தத்துவங்கள்'' (isms), ஏற்கனவே இருந்த “தத்துவங்கள்" அனைத்தும், அவை வருமென்று தேவனுடைய வார்த்தையால் ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டவையே. நமக்கு தேவையான அனைத்தையும் தேவனுடைய வார்த்தை தொடக்கத்திலிருந்து முடிவு வரை நமக்களிக்கிறது என்பதை நான் நம்புகிறேன். இவையனைத்தும் தேவனுடைய வார்த்தையிலேயே காணப்படுகின்றது. அது தேவனுடைய வார்த்தையில் காணப்பட்டால், அதைக் குறித்து நாம் எச்சரிக்கையுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்பது எனது கருத்து, தேவனுடைய வார்த்தை எச்சரிக்கையாக அமைந்து, இவைகளை முன்னறிவிக்கிறது. ஒரு செய்தித்தாளைப் படிப்பது போன்று நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியினால் தேவனுடைய வார்த்தையைப் படிக்கிறீர்கள். பாருங்கள்? ஏனெனில் பரிசுத்த ஆவி கிறிஸ்துவின் மூலம் பேசி, இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினதால் இயேசு தேவனை ஸ்தோத்தரித்ததாக நாம் வேதத்தில் காண்கிறோம். எனவே நாம் கற்க வேண்டிய வேறு வழியில்லை; நாம் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொள்ள வேண்டியதில்லை. நாம் சரியாக நடக்க வேண்டிய ஒரு வழி மாத்திரமேயுண்டு. அதுதான் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுதலாகும். உங்கள் - அனுபவம் தேவனுடைய வார்த்தையுடன் இணைய வேண்டும். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம். பாருங்கள்? இன்னும் சில நிமிடங்களில் நாம் வைதீக கால்வினிஸ்டுகளைக் குறித்தும், வைதீக ஆர்மினியன்களையும் குறித்தும், மற்ற சாராரைக் குறித்தும் பார்க்கப்போகின்றோம். நீங்கள் எவ்வளவு மெல்லியதாக ரொட்டியைத் துண்டு போட் டாலும் அந்த துண்டுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அது முற்றிலும் உண்மை. எனவே இருவருமே தாங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் சரியென்று விவாதிக்க, அதற்கேற்ற குறிப்புகளை வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் சத்தியம் எங்குள்ளது? அதற்குதான் இப்பொழுது நாம் வருகிறோம். தேவனுடைய கிருபையினால், சத்தியத்தை உங்களுக்கு காண்பிக்க முடியும் என்று உணருகிறோம். இப்பொழுது நாம் வேதாகமத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு நான் சில ஸ்தாபன போதகங்களைக் குறித்து வைத் திருக்கிறேன். நாம் அனைவரும் இப்பொழுது சில நிமிடங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்திற்கு வேதத்தைத் திருப்புவோம். அதைப் படித்து, ஸ்தாபனங்கள் எங்கு தொடங்கின, எப்படி தொடங்கின என்பதை அறிந்துகொள்வோம். வேதாகமம் - எல்லாவற்றையுமே முன்னெச்சரிக்கையாக உரைக்கிறது. நாம் வாழும் இந்நாட்களையும் குறித்து அது முன்னெச்சரிக்கையாக உரைத்துள்ளது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து பல என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே. அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி இது பரம இரகசியமாக காணப்படுகிறதல்லவா? அந்த மோசமான பெயர் கொண்ட ஸ்திரீ... இதை உங்களுக்கு நாங்கள் கற்பிக்க வேண்டுமென்றால், இந்த அடையாளங்களின் அர்த்த மென்னவென்று நீங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். வேதத்தில், ‘ஸ்திரீ' ‘சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறாள். நாம் மணவாட்டி-மணவாட்டி சபை - என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்... திரளான தண்ணீர்களின் மேல் உட்கார்ந்திருக்கிற அந்த அசுத்தமான மகா வேசியின் மேல் ஆக்கினை தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள். 'தண்ணீர், ஜனங்களுக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. நீங்கள் 15ம் வசனத்தைப் பாருங்கள். பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். பார்த்தீர்களா? இந்த மகத்தான சபை, மகத்தான ஸ்திரீ... அவள் மோசமான பெயரைக்கொண்ட ஸ்திரீ என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 'ஸ்திரீ' சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறாள். கிறிஸ்துவின் சபை மணவாட்டி (பரிசுத்த மணவாட்டி) யென்றால். இங்கே ஒரு அசுத்தமான (unholy) ஸ்திரீயை நாம் காண்கிறோம். அப்படியானால் அது அசுத்தமான மணவாட்டியாக (மணவாட் டியைப்போல் பாசாங்கு செய்பவளாக) இருக்கவேண்டும். பாருங்கள்? அவள் என்ன செய்கிறாள்? அவள் தண்ணீர்களின்மேல் உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறாள். அதாவது, வெவ்வேறு மொழி பேசும் எல்லா தேசங்களின் பேரிலும் ஜனங்களின் பேரிலும் அவள் ஆளுகை செய்கிறாள். இந்த ஸ்திரீ மகா பெரியவள். ....திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா - வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே..... செல்வந்தர்கள், புகழ்வாய்ந்த மனிதர்கள். ஒரு ராஜா ஒரு சபையுடன் எவ்வாறு வேசித்தனம் செய்யமுடியும்? அது ஆவிக்குரிய விபச்சாரம்.. விபச்சாரம் என்பது என்ன? ஒரு ஸ்திரீ தன் கணவனுக்கு உண்மையாக வாழாமலிருப்பது. அவளுக்கு கணவன் உள்ளபொழுதே, வேறொரு மனிதனுடன் வாழ்வது. இந்த சபையானது கிறிஸ்துவின் மணவாட்டியென்று பாசாங்கு செய்துகொண்டு, அதே சமயத்தில் பூமியின் ராஜாக்களுடன் வேசித்தனம் செய்து தன் அசுத்தமான உத்தியோகத்தின் மூலம் அசுத்தமான வாழ்க்கை நடத்துதல். ஓ, அது மிகவும் ஆழமானது நான் வார்த்தையை நேசிக்கிறேன். இப்பொழுது கவனியுங்கள். ...மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே' அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே. மது என்பது, அவள் மற்றவர்களுக்கு அளிக்கும் ஊக்கம் (Stimulation). “நாங்கள்தான் சபை', “நாங்கள்தான் அதை பெற்றுள்ளோம்' என்பது போன்று. பாருங்கள்? சரி இதை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு, தூதன் யோவானிடம், “இந்த மகா சபைக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்'' என்று கூறினதையும் படியுங்கள். ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். லே அப்பொழுது... சிவப்பு (Scarlet) நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு த ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். வேதத்தில் சிவப்பு நிறம் ராஜரீகத்துக்கு அடையாளமாயுள்ளது. மிருகம் வல்லமையைக் குறிக்கிறது. சமுத்திரத்திலிருந்து மிருகம் எழும்பி வருகின்றது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? சமுத்திர்த்திலிருந்து மிருகம் எழும்பி வருகிறதென்றால், அதன் ஆதிக்கம் ஜனங்களின் மத்தியில் எழும்புகிறது என்று அர்த்தம். ஆனால் வெளி.13ல், ஆட்டுக்குட்டி எழும்பும்போது, அது பூமியிலிருந்து எழும்புகிறது - அதாவது ஜனங்களின் மத்தியி லிருந்தல்ல, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து, அந்த ஆட்டுக்குட்டிக்கு இரண்டு கொம்புகளிருந்தன. அவை மதப் பிரகாரமான (Eccleciastical) ஆதிக்கத்தைக் குறிக்கின்றன. அது வல்லமையைப் பெற்று அதற்கு முன்பிருந்த வலுசர்ப்பத்தைப் போல் பேசினது. எனவே இவைகளை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அஞ்ஞான ரோமா புரியில் மார்க்க சம்பந்தமான துன்புறுத்தல் நேர்ந்தது போன்று, மார்க்க சம்பந்தமான துன்புறுத்தலின் காலத்திற்கு நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இது ''கர்த்தர் உரைப்பதாகும்'' மிருகத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு அதிகாரத்தைப் பெற்று... எலியேசர் ரெபேக்காளைக் கண்டபோது. அது சாயங்கால நேரமாயிருந்தது என்பதை கவனித்தீர்களா? அவள் ஒட்டகத்திற்கு தண்ணீர் வார்த்தாள். “ஆண்டவரே, ஒட்டகத்திற்கு தண்ணீர் வார்த்து, குடிக்க எனக்கும் தண்ணீர் கொடுக்கும் பெண்தான், நீர் உம்முடைய ஊழியனாகிய ஈசாக்குக்கு தெரிந்து கொண்ட மணவாட்டி' என்று எலியேசர் ஜெபம் செய்தான். அவன் ஜெபம் செய்து கொண்டிருந்தபோதே, தண்ணீர் மொள்ள ரெபேக்காள் அங்கு வந்தாள். அவள் எலியேசருக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்து, ஒட்டகத்துக்கும் தண்ணீர் வார்த்தாள். கவனியுங்கள்: ஒட்டகம் என்பது ஒரு மிருகம். அவள் தண்ணீர் வார்த்த அதே மிருகம்தான், அவளை தன் கணவனாகிய ஈசாக்கிடம் சுமந்து சென்றது. இன்றைக்கு சபையானது தண்ணீர் வார்த்து ஆராதித்துக்கொண்டிருக்கும் அந்த பரிசுத்த ஆவியின் வல்லமை தான், அந்த சபையை இப்பூமியிலிருந்து கொண்டு சென்று அவளுடைய மணவாளனைச் சந்திக்கச் செய்யும், நிச்சயமாக. ஈசாக்கு சாயங்கால நேரத்திலே வயல் வெளியில் இருந்தான். நாம் ஆண்டவரை மகிமையில் சந்திக்கப்போவதில்லை. அவரை நாம் ஆகாயத்தில் சந்திப்போம்'' என்று எபேசியர் 5ம் அதிகாரம் உரைக்கிறது. ஓ! அது மெதோடிஸ்டுகளையும்கூட கூச்சலிடச் செய்யும். அதை சற்று யோசித்துப் பாருங்கள்! ஈசாக்கு தன் தகப்பன் வீட்டிலிருந்து வெளியே வந்து, வயல் வெளியில் இருந்தான். அப்பொழுது ரெபேக்காள் ஒட்டகத்தின் மேல் வருவதை அவன் கண்டான். அவள் அவனை முதன் முறையாகப் பார்த்த மாத்திரத் திலேயே அவனை நேசிக்கத் தொடங்கினாள். அவள் ஒட்டகத் திலிருந்து கீழே குதித்து அவனை சந்திக்க ஓடினாள். அது உண்மை ! அங்குதான் நாம் ஆண்டவரை சந்திக்கிறோம். அவள் தண்ணீர் வார்த்த அதே ஒட்டகம் அவளை தன் கணவனிடம் கொண்டு சென்றது. அதுபோன்று சபை ஆராதித்துக்கொண்டிருக்கும் அதே வல்லமை - பரிசுத்த ஆவி - உலகம் அதை மூடபக்தி (Fanaticism) என்று இகழ்ந்தாலும், சபையை ஆகாயத்துக்குக் கொண்டு சென்று, கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கச் செய்யும். பார்த்தீர்களா? ரெபேக்காள் ஒரு கன்னிப்பெண். ஆனால் இப்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்திரீயோ ஒரு வேசி. இப்பொழுது, வல்லமை, ஆதிக்கம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டீர்களா? அது எப்படிப்பட்ட மிருகம்? சிவப்பு நிறம் கொண்டது. அது ஐசுவரியமுள்ள ராஜரீக ஆதிக்கம். அது எப்படிப்பட்ட சபை? அது ஐசுவரியமுள்ள சபை; அது மகா பெரிய சபை, அது அதிகாரங்கொண்ட சபை. அதன் செல்வாக்கு திரளான ஜனங்களிடையே பரவியுள்ளது. பூமியின் ராஜாக்கள் - அதாவது பூமியிலுள்ள மிகப்பெரிய மனிதர்கள் - அவளுடன் ஆவிக்குரிய வேசித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் அவள் யாரென்பதை நாம் காணப்போகிறோம்; இந்த ஸ்தாபனங் களைக் குறித்தும் நாம் கண்டுகொள்ளப்போகிறோம். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும், (ராஜரீகமான) சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தை தன் கையிலே பிடித்திருந்தாள். அவள் கையில் என்ன இருந்தது? அவள் போதகம். அவள் அதை ஜனங்களுக்குக் கொடுத்து, “நாங்கள்தான் சபை' என்கிறாள். அவள் பூமியின் ராஜாக்களுக்கு அதை குடிக்கக் கொடுத்து அவளுடன் வெறிக்கச் செய்து, “நாங்கள் மகத்தான ஆதிக்கத்தைப் பெற்றவர்கள்'', “நாங்கள் எல்லா தேசங்களிலும் பரவியுள்ளோம்'' ''நாங்கள்தான் எல்லா சபைகளைக் காட்டிலும் மிகுந்த மகத்தான சபை. இந்த போதகமாகிய பாத்திரத்திலிருந்து சிறிது குடியுங்கள்'' என்கிறாள். பார்த்தீர்களா? அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும், (ராஜரீகமான) சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தை தன் கையிலே பிடித்திருந்தாள். நண்பர்களே, நாம் நாளேடு ஒன்றைப் படித்துக்கொண்டிருக் கவில்லை. நாம் தேவனுடைய நித்தியமான, ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தையையே படித்துக்கொண்டிருக்கிறோம். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் தேவனுடைய வார்த்தையோ என்றென்றும் நிலைநிற்கும். அது உண்மை, மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அது வேதாகமத்தின் ஆரம்பத்தில் காணப்படுகிறது. அது வேதாகமத்தின் நடுவில் காணப்படுகிறது. இதோ, அது வேதாக மத்தின் கடைசியிலும் காணப்படுகின்றது. உங்களுக்கு ஒரு பின்னணி (background) உண்டாக வேண்டுமென்று கருதி, இதை சில நிமிடங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்புகிறேன். அந்த ஸ்திரீ (கவனியுங்கள், எங்கு ‘ஸ்திரீ' என்று கூறப்படுகிறதோ, அது 'சபையைக் குறிக்கிறது என்று நினைவில் கொள்ளுங்கள்) பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் ('பரிசுத்த வான்கள்' என்னும் வார்த்தை எங்கிருந்து வந்தது? பரிசுத்த மாக்கப்பட்டவர்கள்' என்பதிலிருந்து)... வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன். இந்த ஸ்திரீ - சபை - பரிசுத்தவான்களைத் துன்புறுத்தியிருக் கிறாள். அவள் மகா பெரிய சபை. அவள் உலகம் பூராவும் ஆதிக்கம் செலுத்துகின்றாள். அவள் திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் செய்கிறார்கள். அப்படியானால் அவள் யார்? இது புதிராக இருக்கிறது. ஆனால் ஆவியானவர் அது யாரென்பதை வெளிப் படுத்தித் தருவார். சபையில் ஆவியின் வரங்கள் ஒன்பது இருக்கவேண்டும். ஒன்று, ஞானம்; மற்றொன்று, அறிவை உணர்த்துதல்; மற்றொன்று, சுகமளித்தல் போன்றவை. நாம் தொடர்ந்து பார்ப்போம். அந்த ஸ்திரீ... இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன் (அவர்கள் இயேசு கூறினதைக்குறித்து கவலை கொள்ளவில்லை; அவர்கள் சபை என்ன கூறினதோ அதற்குத்தான் முக்கியத்துவம் செலுத்தினர். அது முற்றிலும் சரி). அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்'. அவளைக் குறித்து ஆச்சரியமானதொன்று உண்டாயிருந்தது. நான் யோவானின் ஸ்தானத்தை இப்பொழுது வகித்து, அதை சற்று விவரிக்க விரும்புகிறேன். பாருங்கள்? இதோ அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் கிறிஸ்தவ சபையைப்போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறாள். உலகிலுள்ள செல்வத்தின் மேல் அவளுக்கு அதிகாரம் உண்டு. பூமியின் ராஜாக்கள் அவளுடைய காலடியில் கிடக்கிறார்கள். அவள் ஐசுவரியமுள்ளவள். அவள் மிகவும் பகட்டாயிருக்கிறாள். அப்படியிருக்க, அவள் எவ்வாறு இயேசு வினுடைய சாட்சிகளின் இரத்தத்தால் வெறிகொண்டிருக்க முடியும்? அவள் எப்படி இயேசுவின் பரிசுத்தவான்களை அடிக்கடி துன்புறுத்தியிருக்க முடியும்? அவள் எப்படி இயேசுவின் சாட்சிகளை கொன்றிருக்க முடியும்? அவள் தன்னை கிறிஸ்தவள் என்றும் கிறிஸ்தவ சபை என்றும் கூறிக்கொள்கிறாளே!'' என்று யோவான் மிகவும் ஆச்சரியப்படுகிறான். இப்பொழுது கவனியுங்கள். அப்பொழுது தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப் படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். அதை பொதுவாகப் படித்தேன். அதை எளிதில் புரிந்து கொள்ளலாம். நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அதுப்ப பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத் தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும் இராமற்போனதும் இனி இருப்பதுமா யிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். இது உங்கள் மனதில் பதிய வேண்டும். கவனியுங்கள், ஒரு சிலர் மாத்திரமல்ல, எல்லாரும். பூமியின் குடிகள் அனைவரும் இந்த ஸ்திரீயைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் அனைவரும், முழு உலகமும் இந்த ஸ்திரீயைக் குறித்து ஆச்சரியப்படுவார்கள். ஒரு கூட்டம் மாத்திரம் அதைக் குறித்து ஆச்சரியப்படமாட்டார்கள். அவர்கள் தாம் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப் பட்டிருப்பவர்கள். இதை இங்கு நுழைக்க விரும்புகிறேன். ஏனெனில் இன்னும் சில நிமிடங்களில் அதைக் குறித்து நாம் பார்க்கப் போகிறோம். பாருங்கள்? அவர்களுடைய பெயர்கள் எப்பொழுது ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்த கத்தில் எழுதப்பட்டது? எப்பொழுது முதல்? அவர்கள் சென் றிருந்த கடைசி எழுப்புதல் கூட்டத்தின் போதா? அல்லது அவர்கள் பீடத்திற்கு சென்று தங்களை ஒப்புக்கொடுத்த அந்த இரவிலா? அல்லது அவர்கள் சபை அங்கத்தினரான அன்றிரவா? உங்களை நான் புண்படுத்த முயலவில்லை. ஆனால் அவர்கள் பெயர்கள் உலகத் தோற்றமுதல் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டு விட்டன என்பதையே குறிப்பிட விரும்புகிறேன். நிச்சயமாக! தொடக்கத்தில் தேவன் தமது குமாரனை அனுப்பி, அவர் பாவியின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்வார் என்று கண்டபோது; தேவனுடைய குமாரனின் இரத்தம் சிந்தப்பட்டபோது... அவருடைய இரத்தம் உலகத்தோற்றத்துக்கு முன்பாக சிந்தப்பட்ட தாக வேதாகமம் கூறியுள்ளது. கிறிஸ்துவின் இரத்தம் உலகத் தோற்றத்துக்கு முன்பாக சிந்தப்பட்டதென்று வேதம் உரைக் கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த இரத்தம் சிந்தப் பட்டபோது, கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள அங்கத்தினர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் அந்த இரத்தத்தினால் உலகத் கோற்றக்துக்கு முன்பே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்த கத்தில் எழுதப்பட்டுவிட்டது. அப்படியானால் நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? ஓ, சகோதரனே! அது கதவுகளின் தாழ்ப்பாள்களைத் திறந்து கொடுக்கிறது அல்லவா? சரி, இவ் வசனத்தை நாம் படித்து அது கூறுவது சரியா என்று பார்க்கலாம்: நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது வ் பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத ப பூமியின் குடிகள்... ஆச்சரியப்படுவார்கள். இவ்வுலகில் ஒரு கூட்டம் ஜனங்கள் மோசம் போவார்கள்; ஏனெனில் அவன் அவர்களை மோசம் போக்கினான். ஆனால் மோசம் போகாத ஒரு குழு இருக்கும். அவர்கள் தாம், உலகத்தோற்ற முதல் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள். அதற்கு நாம் சற்று பின்பு வருவோம். இந்த ஸ்திரீயை-சபையை-கவனியுங்கள். அவள்தான் இரகசியம், மகா பாபிலோன். அவள் நிம்ரோதின் மூலம் தோன்றினாள் என்று பார்க்கிறோம். நிம்ரோதின் நோக்கம் என்ன? நிம்ரோத் ஒரு பட்டணத்தை ஸ்தாபித்து, மற்ற பட்டணங்கள் அனைத்தும் இப்பட்டணத்திற்கு கப்பம் (tribute) கட்டச் செய்தான். இன்று அம்மாதிரியான ஏதாகிலும் நிகழ்கின்றதா? இன்று அத்தகைய ஸ்தலம் ஒன்றுண்டா? உலகிலுள்ள தேசங்கள் அனைத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்தும் சபை ஒன்றுண்டா? நிச்சயமாக!! எல்லா நாடுகளும் அவளுக்குக் கப்பம் கட்டச் செய்யும் ஒரு ஸ்தலம் இன்றுண்டா? அப்படிப்பட்ட ஸ்தலம் ஒன்றுள்ளதா? நாம் தொடர்ந்து வசனங்களை வாசிப்போம். அப்பொழுது உங்களுக்கு காட்சி முழுவதும் புலனாகும் : ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும்….. ஞானம் ஆவியின் வரங்களில் ஒன்று என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அப்படியானால் அவர் எத்தகைய குழுவுக்கு இதை உரைக்கிறார்? தங்கள் சபையில் ஆவியின் வரங்கள் கிரியை செய்யும் குழுவிடம் தான் அவர் இதை கூறிக்கொண்டிருக்க வேண்டும்: “ஞானமுள்ள மனம் இதில் விளங்கும்'' என்று. சபையின் காலங்கள் தோறும் பரிசுத்த ஆவியானவர், இக்கடைசி நாட்களில் இந்த வரங்கள் எப்படி கிரியை செய்யும் என்பதைக் குறித்து பேசி வந்திருக்கிறார். இப்பொழுது சுகமளிக்கும் வரம் கிரியை செய்துவருகின்றது. ஓ, அது மிகவும் நன்றாக கிரியை செய்து வருகின்றது. சரி, சகோதரனே, மற்ற வரங்களும் கிரியை செய்து வருகின்றன. சுகமளிக்கும் வரம் என்பது அவைகளில் ஒன்றாகும். அது ஒரு சிறிய வரம். ஆனால் இங்கு அதைக் காட்டிலும் பெரிய வரம் உள்ளது. எது மிகவும் சிறந்த வரம்? தேவனுடைய வார்த்தையை ஒன்றாக இணைத்து, நாம் எங்கிருக் கிறோம் என்று சபைக்கு உணர்த்தும் பரிசுத்த ஆவியின் வரமாகிய ஞானமா; அல்லது யாரையாகிலும் சுகப்படுத்தும் வரமா? நாம் எல்லாரும் சுகமடையவிரும்புகிறோம். ஆனால் என் சரீரம் சுகமடைவதைக் காட்டிலும் என் ஆத்துமா சுகமடைவதையே நான் எக்காலத்தும் விரும்புவேன். ஓ, என்னே! இங்கு பத்மு தீவிலுள்ள யோவானிடம் பரிசுத்த ஆவியானவர் பேசி, “இது ஞான மனதிற்கு. ஞானமுள்ளவன் இதற்கு செவி கொடுக்கட்டும்'' என்கிறார். இப்பொழுது நமக்கு காட்சி வரையப்பட்டு அளிக்கப்படுகின்றது. ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும், அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம் எனக்குத் தெரிந்தவரை, உலகிலேயே ஏழு மலைகளைக் கொண்ட பட்டணம் ஒன்றுதான் உள்ளது... ஏழு அல்லது அதற்கதிக மான மலைகளைக் கொண்ட இரு பட்டணங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி. சின் சினாட்டியைக் குறித்த கட்டுக்கதை உங்களுக்குத் தெரியும் - அந்தத் தாய் ஓநாய் போன்றவை. ஆனால் அதைக் காட்டிலும் அதிக விவரங்கள் இவ்வசனத்தில் உள்ளன. எந்த ஒரு பிரத்தியேக சபையும் சின்சினாட்டியில் ஆதிக்கம் கொண்டிருக்கவில்லை. ஏழு மலைகளின் மேல் ஒரு சபை உட்கார்ந்து கொண்டு உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தும் பட்டணம் முழு உலகிலும் ஒன்று மாத்திரமே உள்ளது. நான் இப்பொழுதுதான் அங்கிருந்து வந்தேன். அங்குள்ள காரியங்கள் அனைத்தையும் நான் கண்டேன். இதிலே ஞானம் விளங்கும் (வெளி13:18); அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது (ஒரு கூட்டம் மனிதரல்ல; ஒரு மனிதனின் இலக்கம்) அதினுடைய இலக்கம்அறுநூற்றறுபத்தாறு. போப்பின் சிம்மாசனத்தின் மேல் "Vicarivs Filii Dei" என்று எழுதப்பட்டுள்ளது என்று நான் கேட்டதுண்டு. அது உண்மையா என்று நான் வியந்தேன். அதன் ரோம இலக்கங்களை எண்ணிப் பார்த்து அந்த இலக்கம் சரிதானா என்று பாருங்கள். அது முற்றிலும் உண்மை. கண்ணாடிக்குள் வைக்கப்பட்ட போப்பின் மூன்று கிரீடங்களின் அருகில் நான் நின்றேன் - நரகம், பரலோகம், பாவவிமோசன ஸ்தலம் இவைகளின் பேரில் அதிகாரம், பாருங்கள்? இப்பொழுதுதான் நான் ரோமாபுரியிலிருந்து வந்தேன். எனவே அது உண்மையென்று எனக்குத் தெரியும். அதே காட்சி அங்கு வரையப்பட்டுள்ளது. அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள் (அந்த காலத்தில்), ஒருவன் இருக்கிறான் (அந்த காலத்தில் இருந்த ஒருவன். அவன் சீசர்), மற்றவன் இன்னும் வரவில்லை (அவன்தான் பொல்லாங்கனான நீரோ. இதை கவனியுங்கள். இது எவ்வளவு பிழையற்றதாக உள்ளது என்பதை கவனியுங்கள்); வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும் நீரோ எவ்வளவு காலம் அரசாண்டான் என்று யாருக் காகிலும் தெரியுமா? ஆறுமாத காலம். அவன் தன் தாயை வீதியின் வழியாக இழுத்துவந்து, பட்டணத்தை சுட்டெரித்து அந்தப் பழியை கிறிஸ்தவர்கள் மேல் சுமத்தி, பட்டணம் எரிந்து கொண் டிருக்கும்போது, மலை பாகத்திற்கு சென்று 'பிடில்' வாசித்துக் கொண்டிருந்தான். ஆறுமாத காலம். பாருங்கள்? இருந்ததும் இராததுமாகிய மிருகமே (இவன் எவ்வளவு அயோக்கியன் என்று பாருங்கள்) எட்டாவதானவனும் அவ்வேழி லிருந்து தோன்றுகிறவனும் (அந்த ஏழின் சுபாவத்தைப் பெற்றவனா யிருக்கிறான். நாசமடையப் போகிறவனுமாயிருக்கிறான், ("and goeth into perdition") perdition என்பதின் அர்த்தம் யாருக்காகிலும் தெரியுமா? அதுதான் நரகம். அது என்ன? அடிப்பாகம் இல்லாத பாதாளக் குழி (bottomless pit). கத்தோலிக்க போதகத்திற்கு அஸ்திபாரமே இல்லை. எந்த கத்தோலிக்க போதகத்திற்கும் எந்த வேதமும் கிடையாது. கிடையவே கிடையாது. அப்படி இருப்பதாக அவர்களே உரிமை பாராட்டுவது கிடையாது. புனித இருதயப் பள்ளியைச் சார்ந்த கத்தோலிக்க குருவானவர் என்னிடம் வந்தார்... அவரிடம் மேரி எலிசபெத் பிரேஸியர் என்பவளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்ததைக் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தேன். “ஓ, ஆதி கத்தோலிக்க சபை கொடுத்த ஞானஸ்நானத்தை அனுசரித்து நீங்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாக கூறுங்கள்'' என்றார். “எப்பொழுது கத்தோலிக்க சபை அம்முறையில் ஞானஸ் நானம் கொடுத்தது?'' என்று கேட்டேன். அவர், “வேதாகமத்தில், உங்கள் வேதாகமத்தில்'' என்றார். நான், “கத்தோலிக்க சபை அம்முறையிலா ஞானஸ்நானம் கொடுக்கிறது? கத்தோலிக்க சபையின் போதனை அதுவா?'' என்று “ஆம்'' என்றார். “கத்தோலிக்க சபையின் பிழையற்ற தன்மை (infallibility). அப்படியானால் அது ஏன் இவ்வளவு மாறிவிட்டது?'' என்று கேட்டேன். அவர், ''பாருங்கள், நீங்கள் அனைவரும் வேதாகமத்தை விசுவாசிக்கின்றீர்கள். நாங்கள் சபையை விசுவாசிக்கிறோம். வேதம் கூறுவதைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. சபை என்ன கூறுகிறதோ அதுதான் எங்களுக்கு முக்கியம் வாய்ந்தது'' என்றார். அது முற்றிலும் உண்மை . அதைக் குறித்து விவாதிக்க முயன்று பாருங்கள். ஒருமுறை முயன்று பாருங்கள். அவர்களுக்கு வேதம் என்ன கூறினாலும் கவலையில்லை. அவர்களுக்கு அதனுடன் எவ்வித தொடர்பும் இல்லை. சபை என்ன கூறுகிறதோ அதைத் தான் அவர்கள் மதிக்கின்றனர். பாருங்கள்? ஆனால் நாமோ சபை கூறுவதைக் குறித்து கவலை கொள்வதில்லை. நாம் தேவன் கூறுவதையே விசுவாசிக்கிறோம். ஆமென். ஏனெனில், “தேவனே சத்தியபரர் என்றும் எந்த மனுஷனும் பொய்யன்'' என்றும் வேதம் உரைக்கின்றது (ரோமர் 3:4). ஆகையால்தான் நாம் ஒரு ஸ்தாபனமல்ல. இப்பொழுது கவனியுங்கள், இதற்கு சற்று செவி கொடுங்கள். “ஐந்து ராஜாக்கள்'' விழுந்தனர். அதற்கு சரித்திர ஆதாரம் உங்களுக்கு வேண்டுமானால் என்னால் காண்பிக்க முடியும். ஒருவன் இருக்கிறான், மற்றவன் இனி வரவேண்டும். இப்பொழுது கவனியுங்கள்-மிருகம். மிருகம் ராஜாவல்ல. அது இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயுள்ளது; இராமற்போனது இனி இருப்பது, இராமற்போனது. அது என்ன? போப்புகள் ஒருவருக்குப்பின் ஒருவர் வருதல் (Succession of popes). ஒரு அதிகாரம்-மிருகம்-ஆளுகை செய்தல். அது அஞ்ஞான ரோமாபுரி போப்பின் ரோமாபுரியாக மாறினபோது. அப்படி. அது மாறினபோது, ராஜாவுக்குப் பதிலாக போப்பை நியமித்தனர். போப் ஆவிக்குரிய ராஜாவாக முடிசூடப்பட்டவன். அதனால்தான் அவன் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்று உரிமை பாராட்டிக் கொள்கிறான். பார்த்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள். நாம் இப்பொழுது கத்தோலிக்க போதகத்தை எடுத்துக்கொண்டு, அது எவ்வாறு பிராடெஸ்டெண்டு சபைகளிலும் நுழைந்துவிட்டு, இப்பொழுதும் அதன் அநேக போதகங்கள் பிராடெஸ்டெண்டு சபைகளில் காணப்படுகின்றன என்பதை விளக்கலாம். அந்த போதகம் வேதத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாயுள்ளது. இருந்ததும், இராததுமாகிய மிருகம். உலகத்தோற்ற முதல் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத அனைவரும் வஞ்சிக்கப் படுவார்கள். இருந்ததும் இராததுமாகிய மிருகமே (பதினொன்றாம் வசனம்) எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாச மடையப் போகிறவனுமாயிருக்கிறான் (அவன் பாதையின் முடிவில் பாதாளத்தில் தள்ளப்பட்டு நாசமடையும் வரைக்கும், அவன் நீடிப்பான்). நீ கண்ட பத்து கொம்புகளும் பத்து ராஜாக்களாம். (இங்கு கவனியுங்கள். பிரமிக்கத்தக்க ஏதாவதொன்றை காண வேண்டு மானால் இதை கவனியுங்கள்). இவர்கள் இன்னும் ராஜ்யம் பெற வில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள் இவர்கள் முடிசூடப்பட்ட ராஜாக்களல்ல; இவர்கள் சர்வாதிகாரிகள். பாருங்கள், இவர்கள் ராஜாக்களாக முடிசூடப்பட வில்லை. ஆனால் மிருகத்தின் அரசாட்சியில் இவர்கள் ஒரு மணி நேரம் ராஜாக்களைப்போல் அதிகாரம் பெற்றுக்கொள்கின்றனர். அது இந்த சொற்பளவான காலத்தில் மாத்திரமே அந்த சர்வாதிகாரிகள் எழும்பிக் கொண்டிருக்கிறார்கள். பாருங்கள்? “மிருகத்துடனேகூட ஒரு மணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்'' இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப் பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமா யிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார் (மகிமை!); அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். இப்பொழுது “உலகத்தோற்றமுதல் தெரிந்து கொள்ளப் பட்டவர்களும், அவர்களுடைய அழைப்பில் உண்மையுள்ளவர் களாயிருப்பவர்களும்” என்பதைக் குறித்து ஒரு பிரசங்கத்தை நான் செய்யக்கூடுமானால் நலமாயிருக்கும். அல்லேலூயா! அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக் கின்றனர். அவர்கள் மிருகத்தை ஜெயிப்பார்கள். இன்று நம் மிடையே காணப்படும் கம்யூனிஸத்தைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டாம். அது தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக உள்ளது. அதை நான் வேதத்தைக் கொண்டு நிரூபிக்க முடியும். அவள் கொன்றுபோட்ட ஒவ்வொரு இரத்த சாட்சிக்காகவும் அவளை அவர் துன்புறுத்துவார். ஆம், ஐயா. இந்த ராஜாக்கள் ஒரே யோசனையுள்ளவர்கள் என்பதை கவனிக்கவும். அவர்கள் அவளை வெறுப்பார்கள். எல்லா தேசங்களிலும், முழு உலகத்திலுமே கம்யூனிஸம் பரவும். அவளைத் தண்டிப்பதற்கென அது தேவ னுடைய அசைவாயிருக்கிறது. நீங்கள், “சகோ. பிரான்ஹாமே'' சற்று பொறும். கம்யூனிஸம் தேவனுடைய அசைவா?'', எனலாம். நிச்சயமாக! அது தேவனுடைய அசைவு என்பது உறுதி. வேதம் அவ்விதமே கூறுகின்றது. அது தேவனற்ற, சட்ட விரோதமான மக்களின்மேல் நியாயத் தீர்ப்பைக் கொண்டு வருவதற்காக பரவிக்கொண்டிருந்தது. சகோதரியே, சகோதரனே, இன்று ஆண்கள் மற்றவர்களின் மனைவிகளுடன் சல்லாபம் செய்வதும், மனைவிகள் குடும்பத்தை முறித்து, வேறொருவருடன் வாழத் தலைப்படுவதும்... அடுத்த சந்ததி எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அது விவாகமின்றி பிறக்கும் ஒரு கூட்டம் ஜனங்களாயிருக்குமேயன்றி, வேறல்ல. அதற்கு ஒன்று மாத்திரமேயுள்ளது. அதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அணுசக்தி காலம். அது முற்றிலும் உண்மை . நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது 12ம் வசனம். நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள்; இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள். இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப் பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக் கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிற வர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர் களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான் பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும், கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். நீ மிருகத்தின்மேல் கண்ட பத்து கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து. இதைக் கவனியுங்கள், இந்த பத்து கொம்புகள் பத்து ராஜ்யங் கள். பாருங்கள் எல்லாமே ஒன்றாக இணைகின்றது. இந்த சர்வாதி காரிகள் எதன் பேரில் சார்ந்திருப்பார்கள் என்று தெரியுமா? கம்யூனிஸத்தை சார்ந்திராத ஒரு சர்வாதிகாரியை எனக்குக் காண்பியுங் கள் பார்க்கலாம், பாருங்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்? அவர் கள் “அந்த வேசியை (அந்த ஸ்திரீயை, சபையை) பகைப்பார் கள்'' அதற்கு என்ன நேரிடப் போகிற தென்பதை கவனியுங்கள். ...அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமு மாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப் பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் நான் இங்கு நிற்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அவளை அவர்கள் வரைப்படத்திலிருந்தே (map) எடுத்துப் போட்டுவிடுவார்கள். அந்த சபை என்னும் பொருளை எடுத்துக்கொண்டு, வேதவாக்கியங்களை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுவந்து, “பூமியின் ராஜாக்களும் கப்பலாட்களும் 'ஒரு நாழிகையிலே இவள் பாழாய் போனாளே' என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்'' (வெளி.18:9-19) என்று கூறும் பகுதி வரும் வரைக்கும் வர நேரமிருந்தால் நலமாயிருக்கும்! ஒரே நாழிகை யிலே அவளுடைய சமயம் வந்துவிட்டது. “பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக் குறித்து களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே'' (வெளி.18:20). பாருங்கள், அது நிச்சயம் நடக்கப்போகிறது. கம்யூனிஸம் தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக அமைந்து கிரியை செய்கிறது. யூதர்கள் தேவனுடைய சமுகத்திலிருந்து அகன்று போனபோது அவர்களை சிறைபிடித்துக் கொண்டு செல்ல நெபுகாத்நேச்சார் அரசன் எவ்வாறு தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக அமைந் திருந்தானோ (2 ராஜாக்கள் 24, 25), அதுபோன்று. “அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை'' என்று இயேசு கூறினார். என்பதை நீங்கள் அறிவீர்கள். (மத் 24:22). தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும் (பார்த்தீர்களா?), ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும், அவர்களுடைய இருதயங்களை ஏவினார். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணும் மகா நகரமேயாம் என்றான். இதை இன்னும் விளக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இது கத்தோலிக்க வாரிசுரிமை (heirarchy) என்பது நமக்குத் தெரியும். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன் என்று எவ்வளவு உறுதியாக நம்புகிறேனோ, நான் இங்கு கிறிஸ்தவனாக இன்று நின்றுகொண்டிருக்கிறேன் என்று எவ்வளவு உறுதியாக நம்புகிறேனோ, அவ்வளவு உறுதியாக வாடிகன் பட்டணம் தான் ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்துகொண்டிருக்கும் நகரமென்றும், அந்த சபையின் வாரிசுரிமைதான் இருந்ததும், இராததுமாகிய மிருகம் என்றும், அதுதான் மகா பாபிலோன் என்றும் நான் நம்புகிறேன். எல்லாமே பிழையின்றி அமைந் துள்ளது. வேதவாக்கியங்கள் முழுவதும் அதை பிழையின்றி எடுத்துக்காண்பிக்கின்றன. அது கத்தோலிக்க சபை. இங்கு ஒரு அதிர்ச்சியான அம்சம். பிராடெஸ்டெண்டு களாகிய நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்னைக் குறிப்பிடவில்லை'' என்று சொல்லலாம், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது நாம் 5ம் வசனத்திற்கு செல்வோம். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியி லுள்ள சகல அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அவள் யார்? அவள் வேசி. அது மாத்திரமல்ல. அவள் வேறு யார்? தாய். என்ன? தாய். அவள் யாரையோ பிரசவித்திருக்கிறாள். மகன்களுக்கு தாயா? அல்ல, வேசிகளுக்குத் தாய். தாயும் வேசியே. வேசி என்றால் என்ன? நடத்தை கெட்டவள். இவளை நடத்தை கெட்டவளாக ஆக்கியது எது? அவளுடைய போதகம். அவள் கிறிஸ்தவ சபையைப்போன்று பாசாங்கு செய்து, அதே சமயத்தில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகளை ஜனங்களுக்கு அளித்து வந்தாள். அவள் முதலாம் ஸ்தாபனமாக இருப்பாளேயானால், அவளை விட்டு வெளிவந்த சில ஸ்தாப னங்கள் உள்ளன என்று தோன்றுகிறது. அவள் வேசிகளுக்குத் தாய். அது சரியா? வேசிகளுக்குத் தாய். அவள் பையன்களுக்குத் தாயாக இருக்கமுடியாது. அவள் ஸ்திரீகளின் தாயாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் ஸ்திரீகள் தாம் வேசிகளாக இருக்கமுடியும். அவர்கள் ஸ்திரீகளாக இருந்தால், அவர்களும் சபைகளே. அவர்கள் யார் என்று இப்பொழுது கண்டு பிடிப்போம். முதலாம் ஸ்தாபனம் எது? கத்தோலிக்க சபை. இரண்டாம் ஸ்தாபனம் எது? லூத்தர். மூன்றாம் ஸ்தாபனம் எது? ஸ்விங்லி. அதன்பின்பு என்ன? கால்வின். கால்வினிலிருந்து ஆங்கிலிகன் சபை, ஆங்கிலிகனிலிருந்து மெதோடிஸ்டு சபை. மெதோடிஸ்டு சபை எதை தோற்றுவித்தது? அதிலிருந்து அலெக்ஸாண்டர் காம்ப்பெல் தோன்றினார். அலெக்ஸாண்டர் காம்ப்பெல்லிலிருந்து ஜான் ஸ்மித். அலெக்ஸாண்டர் காம்ப்பெல் கிறிஸ்தவ சபை. அதிலிருந்து நான்கு, ஐந்து பிரிவுகள் உண்டாயின-கிறிஸ்துவின் சபை போன்றவை. அவை ஒவ்வொன்றும் தனித்தனி தத்துவங்களை உண்டாக்கிக்கொண்டன. பின்பு பாப்டிஸ்டு சபை தோன்றியது. அதிலிருந்தும் பிரிவுகள் தோன்றின. மெதோடிஸ்டு சபை யிலிருந்து வெஸ்லியன் மெதோடிஸ்டுகள் தோன்றினர். அவர் களும் நான்கைந்து முறை பிரிவுகளை உண்டாக்கிக்கொண்டனர். வேறொருவிதமான மெதோடிஸ்டுகள் தோன்றினர். அதிலிருந்தும் பிரிவுகள் உண்டாயின. பின்பு சுயாதீன மெதோடிஸ்டுகள் தோன்றினர். பின்பு நசரீன்கள், நசரீன்களிலிருந்து யாத்திரீக பரிசுத்தர்கள், இவ்வாறு ஒவ்வொருவரும் சிறு சிறு தத்துவங்கள் ஏற்படுத்திக்கொண்டு பிரிந்து கொண்டே சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தனர்? அவர்கள் பெந்தெகொஸ்தேயில் முடிந்தனர். பெந்தெகொஸ்தே என்ன செய்தது? தன் தாய் செய்தவிதமாகவே அதுவும் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டது. அது என்னவாயிற்று? ஒரு ஸ்தாபனமாக, நீங்கள் அதற்குள் நுழைந்து பாருங்கள். அவர்கள் உங்களை கேட்கும் முதல் கேள்வி: “நீ எந்த போதகத்தை உடையவனாயிருக்கிறாய்?'' என்பதே. நீங்கள் விசுவாசிக்கும் போதகம் என்ன என்பதை அறிந்து கொள்ள அவர்கள் உங்களை அலசி எடுக்கிறார்கள். பாருங்கள்? அவர்கள் விசுவாசிக்கும் போதகத்துடன் நீங்கள் விசுவாசிப்பது இணையாமற் போனால் சகோதரனே, உடனே அவர்கள் உங்களை சபை பிரஷ்டம் செய்வார்கள். அது உண்மை . பெந்தெகொஸ்தேயினர் என்று உங்களை அழைத்துக்கொள்வதால், நீங்கள் பாதுகாப்பாயிருக்கிறீர்கள் என்று எண்ணவேண்டாம். சகோதரனே, பாதையிலுள்ள பெந்தெகொஸ்தேயினரின் அளவுக்கு பாதை தவறின பெந்தெ கொஸ்தேயினரும் இருக் கின்றனர் என்பதை நான் நிச்சயம் அறிவேன். கத்தோலிக்க சபைதான் முதலாவது எழுந்த வேசி. அவள் தானாக போதகங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டாள். அவள் பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப் போகிறாள்'' என்று வேதம் உரைக்கின்றது. அப்படித்தான் வேதம் கூறுகின்றது. கத்தோலிக்க சபை தன் போதகங்களை போதித்தால், அது தவறு. தேவனுடைய வார்த்தையின்படி, அது தவறாகும். பின்பு மெதோடிஸ்டு சபை அதனின்று பிறக்கின்றது. காண்பதற்கு அது அழகான பெண்ணாயுள்ளது. ஆனால் அவள் என்ன செய்தாள்? அவள் திரும்பச்சென்று, தன் தாயார் செய்ததையே செய்தாள்? அவளுடைய சபையோர் குட்டைக்கால் சட்டை அணியவும் புகை பிடிக்கவும் அவள் அனுமதித்தாள். அவர்கள் செய்யத்தகாத காரியங்களை செய்தனர். ஆயினும் அதை கண்டித்து எதுவும் கூறப்படவில்லை. அதை கண்டித்து உணர்த்தினால், அவருடைய சம்பளம் என்றாகிலும் ஒரு நாளில் போய்விடுமென்று அதன் போதகர் பயப்படுகின்றார். சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன். நான் பிஸ்கட்டை தின்று வெறும் தண்ணீர் குடிக்க நேர்ந்தாலும், சத்தியத்தை மாத்திரமே எடுத்துரைப்பேன். அதன் விளைவாக என் சபையின் அங்கத்தினர் ஒவ்வொருவராக எழுந்து செல்ல நேர்ந்தாலும், நான் அப்பொழுதும் அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பேன். ஆம், உண்மையாக. ஆனால் என்ன சம்பவிக்கிறது? அவர்களுடைய ஆகாரமே அவர்களுக்கு பிரதானமாயுள்ளது. ''நான் பட்டணத்திலுள்ள மிகப்பெரிய சபைக்கு போதகராக இருக்கிறேன்'' என்று பெருமையடித்துக் கொள்கின்றனர். கள்ளத் தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்கும் பாப்டிஸ்டுகளே, மெதோடிஸ்டுகளே! இது ஒரு கொடூரமான வார்த்தைதான். வேதத்துக்கு முரணான காரியங்களை போதிக்கும் எவரும் கள்ளத்தீர்க்கதரிசியே. அது எவ்வளவாக மெருகேற்றப் பட்டிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது கள்ளத்தீர்க்க தரிசனமே. அது உண்மை . “ஓ, ஸ்தாபன புத்தகத்தில் என் பெயர் எழுதப்பட்டுள்ள வரை எல்லாம் சரியாக இருக்கின்றது'' என்று நீ கூறலாம். ஒருக்கால் உன் பெயர் ஒரு டஜன் புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கலாம். ஆனால் உன் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப் படாமலிருந்தால், நீ இழந்துபோனவன். நீ நல்லவனாயிருக்கலாம். நீ உன்னால் இயன்ற வரை உத்தமனாகவும், சுத்தமாகவும், நன்னடத்தையுள்ளவனாயும் இருக்கலாம். ஆனால் அதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏசா யாக்கோபை விட இருமடங்கு நல்ல மனிதனாக இருந்தான். அவன் தன் வயோதிப குருட்டு தந்தையை நன்கு கவனித்தான். யாக்கோபோ வெட்க முள்ள தன்மையுடையவனாயிருந்தான். அவன் எப்பொழுதுமே தன் தாயாரின் உடையை பிடித்துக்கொண்டிருந்தான். அவன் பெண்மைத் தன்மை கொண்டவனாயிருந்தான். ஆனால் தேவன் “அவர்கள் பிறவாதிருக்கும்போதே நான் யாக்கோபைச் சிடே கித்து ஏசாவை வெறுத்தேன்'' என்றார். ரோமர் 9 அப்படி கூறுகிறது. அது முற்றிலும் உண்மை . ஒரு மனிதனுக்குள் என்ன இருக்கிறது என்பதை தேவனறிவார். அவ்வாறே சபையிலும் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். நாம் ஜீவ அப்பத்தை-தேவனுடைய வார்த்தையை கொண்டு வாழ்கிறோம். ஆகவே தான் நாம் ஒரு ஸ்தாபனமல்ல. நான் இங்கு எழுதி வைத்துள்ள வேறொரு வசனத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். வெளி.19:2. அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும், நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக் கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். அதுதான் கத்தோலிக்க சபையின் முடிவு. மேலும், வேதாகமம் ஒரு ஸ்தாபனத்தைக் குறித்து பேசுவதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஸ்தாபனங்கள் கத்தோலிக்க சபையிலிருந்து தோன்றின. அவள் தான் ஸ்தாபனங்களுக்குத் தாய். ஒவ்வொரு ஸ்தாபனமும் அவளிலிருந்து படிப்படியாய் தோன்றினது. இது உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். அது இன்னும் கடினமாகிக்கொண்டே போகும். பாருங்கள்? அதாவது ஸ்தாபனங்கள் தேவனால் பிறந்தவை அல்ல; அவை தேவனால் ஏற்படுத்தப்படவுமில்லை என்பதை நீங்கள் காணவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவை பிசாசினால் ஏற்படுத்தப்பட்டவை! தேவனுடைய சபையானது... “நாம் பிரிக்கப்படுவதில்லை; நாம் ஒரே சரீரமாக, ஒரே நம்பிக்கையும் ஒரே போதகத்தையும் கொண்டவர்களாய், ஒரே அன்பில் நிலைத்திருக்கிறோம்.'' அதுதான் ஜீவனுள்ள தேவனுடைய சபை. மற்ற காரியங்கள் என்னவாயிருப்பினும், நாமெல்லாரும் ஒன்றாயிருக்கிறோம். அது உண்மை . ஒருவர் மெதோடிஸ்டாக இருந்தாலும் பாப்டிஸ்டாக இருந்தாலும்... சகோதரனே, அவர் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தால் அவர் என்னுடைய சகோதரராகிவிடுகிறார். அப்பொழுது நாம் ஒருமித்து நடக்கிறோம். அது உண்மை . இந்த தேசம் (அமெரிக்கா) ஒரு ஸ்திரீயின் தேசம். அதை நான் வேத வாக்கியங்களின் மூலம் நிரூபித்திருக்கிறேன். நீங்கள் எதைக் கொண்டு அதை நிரூபிக்கக் கூறினாலும், என்னால் நிரூபிக்க முடியும். நமது நாணயத்தின் மேல் என்ன உருவம் காணப்படு கிறது? ஒரு ஸ்திரீ. இந்த தேசம் வெளிப்படுத்தின விசேஷத்தில் எங்கு காணப்படுகிறது? 13ம் அதிகாரத்தில். அவளுடைய எண் ணிக்கை 13ஆகும், அவளுக்கு எல்லாமே 13ஆக அமைந்துள்ளது. அவளுடைய கொடியில் 13 நட்சத்திரங்கள், 13 கோடுகள் , 13 குடியிருப்புகள்... எல்லாமே 13ஆக உள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்திலும் அவள் 13ம் அதிகாரத்தில் காணப்படுகிறாள், ஒரு ஸ்திரீ, பதின்மூன்று. இப்பொழுது கிறிஸ்துவின் சபை கட்டிடம் காணப்படும் இடத்தில், பழைய மேசன்கள் விடுதி இருந்தது. 1933ம் ஆண்டில் அங்கு நாங்கள் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தபோது, தேவனுடைய தரிசனம் எனக்குண்டானது, அப்பொழுது நான் ஜெர்மனி எழும்பும் என்றும், அங்கு சைக்ஃபிரீட் (Siegfried line) எல்லை இருக்குமென்றும் முன்னறிவித்தேன். உங்களில் அநேகர் அதை ஞாபகத்தில் கொண்டுள்ளீர்கள். அவர்கள் எவ்வாறு அங்கு அரணிப்பாயிருப்பார்கள் என்றும், அமெரிக்கர்கள் அந்த எல்லை யில் படுதோல்வியடைவார்கள் என்றும் முன்னறிவித்தேன். ரூஸ்வெல்டைக் குறித்தும் அவர் எவ்வாறு நான்காம் முறையாக தேர்தலில் நின்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் நான் முன்னறிவித்தேன், அவை யாவும் பிழையின்றி நான் முன்னறிவித்தபடியே நிறைவேறின. மோட்டார் வாகனங்களின் அமைப்பு சிறிது சிறிதாக முட்டை வடிவத்தை அணுகி, கடைசி நாட்களில் அவை முற்றிலும் முட்டை வடிவத்திலே காணப்படும் என்றும், அவை மனிதனால் ஓட்டப்படாமல் ‘ரிமோட் கண்ட்ரோல்' (Remote Control) லில் ஓட்டப்படும் என்றும் முன்னறிவித்தேன். இப்பொழுது அந்த மோட்டார் கார்களை தயாரிக்கின்றனர். அது மிகவும் பாதுகாப்பானது. அது “20 மைல் வேகம் மண்டலம்'' என்றால் 20 மைல் வேகத்தில் தான் செல்லும்; வேறொரு காருடன் அது மோத முடியாது. ஏனெனில் அது ‘ரிமோட் கண்ட்ரோலில்' இயங்குகிறது. பார்த்தீர்களா? அது அப்படியாகிக் கொண்டு வருகிறது. நான், “முடிவு காலம் வருவதற்கு முன்பு ஒரு ஸ்திரீ (இதை நீங்கள் எல்லோரும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்) - மிகுந்த வல்லமையுள்ள ஒரு ஸ்திரீ - அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எழும்பி, ஜனாதிபதியாகவோ, அல்லது சர்வாதிகாரியாகவோ அல்லது செல்வாக்கு கொண்டவளாகவோ இருப்பாள். நாடு ஸ்திரீகளின் செல்வாக்கினால் அமிழ்ந்தேபோகும்'' என்று கூறினேன். அது “கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார்'' என்பதாக உள்ளது என்பதை ஞாபகம் கொள்ளவும். பாருங்கள்? நாடு செய்வது மிகவும் தவறு. அது எதற்கு வழி வகுக்கிறது? நான் அதை உங்களுக்குக் கூறட்டும். நீங்கள் ஆவிக்குரியவர் களாயிருந்து, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். இந்த தேசம் ஏன் அப்படி செய்கிறது? கத்தோலிக்க சபை உள்ளே நுழைவதற்கு அது வழிவகுக்கிறது. நான் ஒரு சிறு சிலுவையை என் காரில் தொங்கவிட்டிருக்கிறேன். உங்களில் அநேகர் அதைக் கண்டிருக் கிறீர்கள். அதைப் பார்த்துவிட்டு ஒருவர் என்னிடம், “நீங்கள் கத்தோலிக்கரா?'' என்று கேட்டார். கத்தோலிக்கர்களுக்கு சிலுவையின்மேல் எப்பொழுது பிரத்தியேக உரிமை அளிக்கப் பட்டது? சிலுவை கிறிஸ்தவர்களுக்கு அடையாளமாயுள்ளது. சிசிலியாஸ் போன்ற பரிசுத்தவான்களும் பரிசுத்தவாட்டிகளும் மாத்திரமே கத்தோலிக்கர்களின் அடையாளமாயுள்ளனர். நாம் அப்படிப்பட்டவைகளில் நம்பிக்கை கொள்வது கிடையாது. நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவர்கள் மரித்த வர்களை வழிபடுகின்றனர். அது ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் செயலின் (Spiritualism) ஒரு உயரிய முறையாகும். அவ்வளவு தான் - மரித்தவர்களை வழிபடுதல். அப்படிப்பட்ட ஒன்று கிடையாது. நான் கத்தோலிக்க குருவானவர் ஒருவரிடம், “பேதுரு முதல் போப்பாக இருப்பாரானால்...” என்றேன். அவர், “அது உண்மை '' என்றார். “அப்படியானால் தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே. அவர்தான் கிறிஸ்து இயேசு என்று பேதுரு விசு வாசித்தானே. உங்களுக்கோ ஏறக்குறைய ஐயாயிரம் மரித்த பெண்களும் மற்றவர்களும் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் மத்தியஸ்தர்களாக ஆக்குகின்றீர்களே!'' என்றேன். என்ன சம்பவித்தது? அதுதான். அவர்கள் அதற்கு உத்தரவு சொல்ல இயலாது. அது உண்மை . அவர்களுடைய சில போதகங்களை (கள்ள போதகங்களை), ஒரு கூட்டம் பிராடெஸ் டெண்டு கள்ளத்தீர்க்கதரிசிகள் போதித்து வருகின்றனர். பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்களும் அதை ஏற்றுக் கொள் கின்றீர்கள். அது முற்றிலும் உண்மை . ஸ்தாபனங்களும், நீங்கள் கடைபிடிக்கும் ஞானஸ்நானமுறைமைகளும் வெவ்வேறு ஒழுங்குகளும் வேதப் பூர்வமானவை அல்ல. அவை வேதத்திற்கு விரோதமாயுள்ளன. இருப்பினும் நீங்கள் அதை இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். நான் கூறுவது உண்மை. அது என்ன? அவள் வேசிகளின் தாய். அவளை வேசியாக்கியது எது? அவளுடைய போதகம். முதலாம் சபையாகிய எபேசு சபை மகத்தான சபையாக இருந்தது. அவர், ''உனக்கு இன்னும் கொஞ்சம் பெலன் உண்டு'' என்றார். நீங்கள் கவனிப்பீர்களானால், ஒவ்வொரு சபையும் மங்கிக்கொண்டே வந்து தீயத்திரா சபையின் காலத்துக்கு வந்தது. அந்த 1500 ஆண்டுகள். அவர்கள் மறுபுறத்தை அடைந்தனர். “உனக்குக் கொஞ்சம் பெலன் இருக்கிறது. ஆகையால் உன்னிடத் திலுள்ளதை ஸ்திரப்படுத்து. இல்லாவிட்டால் உன் விளக்குத் தண்டு நீக்கப்படும். பின்பு அது பிலதெல்பியா சபை காலத்திற்கு வந்து, முடிவில் லவோதிக்கேயா சபை காலத்தை அடைந்துள்ளது. இது மிகவும் அழகாயுள்ளது. ஓ, என்னே ! இது எனக்கு விருப்பம். இதைப் பாருங்கள். இப்பொழுது நாம் பார்த்த இந்த சபை காலத்தில்; இதை கவனியுங்கள். முதலாம் சபையின் காலம் எபேசு சபை காலம். ஒவ்வொரு சபையின் காலம் கடந்து 1500 ஆண்டுகள் கழிந்த பின்பு; இன்றிரவு வீட்டிற்கு சென்று, சமயமிருந்தால் இதை படித்துப் பாருங்கள். அல்லது காலை ஆராதனைக்கு வருவதற்கு முன் விடியற்காலையில் படியுங்கள். இதை நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 1ம், 2ம், 3ம் அதிகாரங்களில் காண்பீர்கள். ஒவ்வொரு சபையின் காலத்திலும் அவர், “உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலிக்கவில்லை'' என்கிறார். 1500 ஆண்டுகள் கழிந்து தியத்தீரா சபை காலம் - இருளின் காலங்கள் - வரைக்கும் அவ்வாறு கூறுகின்றார். பின்பு அவர் மறுபுறம் சென்று, “நீ ஒரு நாமத்தைக் கொண்டு உயிர்வாழ்கிறாய். ஆனால் நீ செத்தவனாயிருக்கிறாய்'' என்கிறார். பிலதெல்பியா சபையின் காலத்தில் முன்பிருந்த காலத்தில் அவர்கள் அந்த நாமத்தை அறிந்துகொள்ளவில்லை. ஏனெனில் அந்த நாமம் அக்காலங்களில் மறைந்துவிட்டது. அதற்கு காரணம் கத்தோலிக்க சபையின் கள்ளப் போதகமே என்று உறுதியாக கூறமுடியும். அவள்தான் அதற்கெல்லாம் தாய் - மகாபாபிலோன் இரகசியம். சபையின் காலங்களில் இருந்த ஒளி 1500 ஆண்டு காலமாக சிறிது சிறிதாக மங்கிக்கொண்டே வந்து, அவள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக்கொண்டாள். அவள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சபையென்று அறியப்படாமல், கத்தோலிக்க சபை என்று அறியப்பட்டாள். லூத்தர் எப்படி வெளி வந்தார்? லூத்தரன் சபையாக, பாப்டிஸ்டுகள் எப்படி வெளிவந்தனர்? பாப்டிஸ்டு சபையாக, அவருடைய நாமத்திலல்ல. அவருடைய நாமத்தி லல்ல, வேறொரு நாமத்தில். “உனக்கு ஒரு பெயர் உண்டு'' “நீங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழுங்கும் இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளை யிடப்படவில்லை” “நீ ஒரு நாமத்தைக் கொண்டு உயிர் வாழ்கிறாய், ஆனால் நீ செத்தவனாயிருக்கிறாய்.” ஆனால் ஸ்தாபனமோ, "ஓ, நான் பிரஸ்பிடேரியன்'' என்கிறது. அப்படியானால் நீ செத்தவனா யிருக்கிறாய். “ஓ, நான் பாப்டிஸ்டு'' நீ செத்தவன். நீ இயேசு கிறிஸ்துவுக்குள் மாத்திரமே உயிருள்ளவனாயிருக்கிறாய். அது உண்மை . உங்களுடைய தவறான தண்ணீர் ஞானஸ்நானங்கள் - தண்ணீரில் முழுக்குவதற்குப் பதிலாக தெளித்தல், ஊற்றுதல் போன்றவை; “கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நாமத்தை'' தண்ணீர் ஞானஸ்நானத்தில் உபயோகிப்பதற்கு பதிலாக “பிதா, குமாரன், பரிசுத்ததாவி'யை உபயோகித்தல். இந்த தவறான காரியங்களை வேதாகமம் கண்டிக்கின்றது. அப்படியிருந்தும், நாம் அவைகளைப் பொறுத்துக்கொண்டு, அவைகளைப் பின்பற்றி, ''என் சபை அவ்வாறுதான் விசுவாசிக்கின்றது'' என்கிறோம். ஆனால் வேதமோ வேறு விதமாக கூறுகின்றது. அவை வேதத்தில் காணப்படவில்லை. நாவை நீட்டி பரிசுத்த நற்கருணையை பெற்றுக்கொள்வதும், குருவானவர் திராட்சரசத்தை குடித்து அதை பரிசுத்த ஆவி என்றழைப்பதும் வேதத்தில் எங்கேயும் காணப்படவில்லை. அவர்கள் கைகளைக் குலுக்கி, ஐக்கியத்திற்கு வலது கை கொடுத்து, அதை பரிசுத்த ஆவி என்று அழைத்ததாக வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லை. ஒருவர் எழுந்து நின்று, “நான் இப்பொழுது விசுவாசி' என்று சொல்லி, அவ்வாறு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படி அவர்கள் பெற்றிருந்தால் அப்போஸ்தலர் 2ம் அதிகாரம் இவ்வாறு எழுதப்பட்டிருக்க வேண்டும்: “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, கழுத்துப்பட்டை அணிந்த ரோமன் கத்தோலிக்க குருவானவர் சாலை வழியாய் வந்து, “நீங்கள் எல்லோரும் உங்கள் நாவை நீட்டி, முதல் நற்கருணையாக பரிசுத்த யூகாரிஸ்டை பெற்றுக்கொள் ளுங்கள்.'' அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை அவ்வாறு படிப்பது நன்றாயுள்ளதா? பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்களும் மோசமா யிருக்கின்றீர்கள். நீங்கள் மெதோடிஸ்டுகளிடம் செல்வீர்களானால் அவர்கள், “அந்நியோந்நியத்திற்கு அடையாளமாக நாங்கள் வலது கை கொடுக்கிறோம், நீங்கள் ஆறுமாத காலம் 'ப்ரொபேஷனில் (Probation) இருக்கவேண்டும்'; என்கிறார்கள். அதை அப்போஸ் தலர் 2ல் எங்கு படிக்கின்றீர்கள்? அது, “அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்தார்கள்'' என்று கூறுகின்றது. அங்கு எந்த பேராயரோ அல்லது குருவானவரோ வந்து அதைச் செய்யவில்லை, ஆனால் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அம்முறையில்தான் அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஆம், ஐயா! அது மகிமை யிலிருந்து வந்த பலத்த காற்று அடிக்கிற முழக்கம். அது சாலையிலிருந்தோ அல்லது வேறு எந்த ஸ்தாபனத்திலிருந்தோ வரவில்லை . “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனா யிருக்கிறாய்.” பாருங்கள்? உங்கள் கோட்பாடுகளும் ஸ்தாபனங் களும் தேவனை தடை செய்துவிட்டன... "நாங்கள் இதை நம்புகிறோம், அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று நாங்கள் நம்புகிறோம்” கள்ளத்தீர்க்கதரிசி மாத்திரமே அப்படி கூறுவான். கரங்குலுக்கி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளலா மென்று கள்ளத்தீர்க்கதரிசி மாத்திரமே கூறுவான் நீங்கள் விசுவாசிக்கும்போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று கள்ளத்தீர்க்கதரிசி மாத்திரமே உங்களிடம் கூறுவான். நீங்கள் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவதற்கு பதிலாக தண்ணீர் தெளிக்கப்பட்டு, ஊற்றப்பட்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள் ளலாமென்று கள்ளத் தீர்க்கதரிசி மாத்திரமே உங்களிடம் கூறுவான். நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளலாம் என்று கள்ளத்தீர்க்கதரிசி மாத்திரமே உங்களிடம் கூறுவான். அதற்கு வேத ஆதாரம் எதுவுமில்லை. அவ்விதம் வேதத்தில் ஒருவரும்கூட ஞானஸ்நானம் பெறவில்லை. ஞானஸ்நானம் பெற்றவர் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமே ஞானஸ்நானம் பெற்றனர். யோவான் ஸ்நானனின் சீஷர்கள் மாத்திரமே வேறுவிதத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள அவர்கள் மீண்டும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிற்று, அது உண்மை. அது 'இயேசு மாத்திரம்' போதகமல்ல. 'இயேசு மாத்திரம்' போதகம் எனக்குத் தெரியும். அது இதுவல்ல, நான் கூறுவது வேதாகமப் போதகம். இன்று காலை இதை ஞாபகம் கொள்ளுங்கள். ஜீவனைத் தேடுங்கள், ஓ, அதைத் தொடர்ந்து கொள்ளுங்கள்! அதற்காக தாகமுள்ளவர்களாயிருங்கள்! அதை எட்டிப்பிடித்துக்கொண் டிருங்கள். எதுவும் உங்கள் வழியின் குறுக்கே வர அனுமதிக்க வேண்டாம். அதைத் தேடுங்கள். அப்படி செய்யும் வரைக்கும், இப்பொழுது நாம் இங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் நாமத்தை நம்முடன் கொண்டு செல்லவேண்டும். அவருடைய பாதங்களில் சாஷ்டாங்க மாக விழுந்து பணியவேண்டும். நமது பயணம் முடிவடையும் போது, பரலோகத்தில் ராஜாதி ராஜாவாக இருக்கும் அவருக்கு நாம் முடிசூட வேண்டும். ஆமென்.